Tuesday, August 22, 2006

இலங்கை பிரச்சனை - புதுவையில் பந்த்

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டம் செஞ்சோலை பகுதியில் 61 சிறுமிகளை கொலைசெய்த இலங்கை அரசை கண்டித்து அஞ்சலி நிகழ்ச்சி புதுவையில் நடைபெற உள்ளது.

வரும் 24-08-2006 அன்று மாலை புதுவை சிங்கார வேலர் சிலையிலிருந்து தொடங்கி கடற்கரை காந்தி சிலை வரை அமைதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

புதுவையில் 21-08-2006 அன்று இக்கொலை நிகழ்ச்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த 110 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இதே செஞ்சோலை நிகழ்ச்சியைக் கண்டித்து புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

வரும் 29-08-2006 செவ்வாய் அன்று அனைத்துக் கட்சிகள் சேர்ந்து ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்த வேலைநிறுத்ததை (பந்த்) புதுவை ஈழமக்கள் ஆதரவு கூட்டமைப்பு நடத்துகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் கலந்து கொள்கின்றன.

Tuesday, July 04, 2006

புதுவையில் இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈழமக்கள் ஆதரவு கூட்டமைப்பு சார்பில் கடந்த 16-06-06 வெள்ளி மாலை 5 மணியளவில் புதுச்சேரி, பழைய திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அமைப்பாளர் இரா. அழகிரி தலைமை ஏற்றார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டனர். முழக்க அட்டைகள் உயர்த்திப் பிடிக்கப்பட்டன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, காவல் துறைக் கெடுபிடிக்கிடையில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர் விவரம்

1. ம.தி.மு.க. சார்பில் செ. முத்து, நா. மணிமாறன், வெ. முத்து, பாவாடைச்சாமி, தூ. சடகோபன், கபிரியேல், பார்வதி, வீரம்மாள், தமிழ்ஒளி, இராமதாசு, வே இரகுபதி, இராசா.
2. விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வணங்காமுடி, பாவாணன், அமுதன், வெண்மணி,
3. பெரியார் திராவிடர் கழகம் சார்பில் லோகு. ஐயப்பன், ம. இளங்கோ, இரா. வீராசாமி. வீர. மோகன் தட்சிணாமூர்த்தி,
4. இராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தி. சஞ்சீவி,
5. ஜனநாயக முன்னேற்றக் கழகம் சார்பில் அதிரடி அழகானந்தம்,
6. தமிழர் தேசிய இயக்கம் சார்பில் மருத்துவர் முத்துசெல்வம் சி. நாகலிங்கம், இரா. இராசாராமன், பொன்னுசாமி,
7. மக்கள் உரிமை கூட்டமைப்பு கோ. சுகுமாரன் ,
8. புரட்சிகர இளைஞர் முன்னணி இரா. சுகுமாரன் ,
9. செந்தமிழர் இயக்கம் ந.மு. தமிழ்மணி, செ. முருகன், ந. செங்கதிர், மு.வி. இளைய குமரன்,
10. செம்படுகை நன்னீரகம்: இராமமூர்த்தி,
11. பகுஜன் சமாஜ் கட்சிஇருதயராசு,
12.தந்தை பெரியார் சிந்தனை மையம் கோகுல்காந்தி நாத் ,
13.மீனவர் விடுதலை வேங்கைகள் இரா. மங்கையர்செல்வன் ,
14.உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்வீர மதுரகவி, பவானி மதுரகவி ,
15.தமிழ் வளர்ச்சி நடவடிக்கை குழு ம.இலெ. தங்கப்பா ,
16.இயற்கை கழகம் வேலாயுதம்,
17.புதுவை சிவம் இலக்கியப் பாசறை சிவ. இளங்கோ,
18.அயோத்திதாசர் பண்டிதர் பேரவை,மு. வேல்முருகன் ,
19.புரட்சிப்பாவலர் இலக்கியப் பாசறை சி.வெற்றிவேந்தன், இரா. சேகர் , 20.தமிழ்ச்செல்வம், மஞ்சினி,
21.இராவணன் படிப்பகம்: வீராசாமி,
22.தனித்தமிழ்க் கழகம்: தட்சிணாமூர்த்தி
23.அரியாங்குப்பம் தமிழிளைஞர் நற்பணி மன்றம் சீத்தா பிரபாகரன் ஜெயமூர்த்தி, ஆனந்தகுமார் சார்பிலும் மற்றும் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Monday, February 20, 2006

விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கவேண்டும்

இந்தியாவின் புதுவை மாநிலத்தில் அரியாங்குப்பத்தில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

இந்த மாநாட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, பொதுச் செயலாளர்களில் ஒருவரான கோவை கு.இராமகிருட்டிணன் மற்றும் பொதுச் செயலாளர்களில் ஒருவரான தமிழீழ விடுதலைப் போராட்ட பரப்புரையாளர் விடுதலை க.இராசேந்திரன், தமிழ் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மக்கள் உரிமை கூட்டமைப்பை சேர்ந்த புதுவை கோ.சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத்தின் நிர்வாகி இரா.அழகிரி மற்றும் மீனவர், விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் திரு இரா.மங்கையர் செல்வம், செந்தமிழர் இயக்கத்தலைவர் ந.மு. தமிழ்மணி, மற்றும் ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தமிழீழத்தில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உதவக்கூடிய வகையிலும், தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க தமிழக மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை மீட்கும் வண்ணமும் இந்திய அரசு விடுதலைப்புலிகளின் மீதான தடையை விலக்கிக்கொள்ள வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழீழத்தின் அமைதியைக் குலைக்கும் வகையில் தமிழ் மக்கள் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டு முயற்சிகளைச் செய்து வருகிறார். எனவே இந்திய அரசு சிங்கள அரசுக்கு எந்த வகையிலும் உதவக்கூடாது. உள்ளிட்ட பல தீர்மாணங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அக்கட்சியின் புதுவை மாநில செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ நன்றி கூறினார்.

Friday, December 09, 2005

புதுவையில் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு

  • மரண தண்டனை ஒழிப்பு மாநாடு 2005 டிசம்பர் 10, சனிக்கிழமை அன்று மாலை 6.00 புதுவையில் சுதேசி பாஞ்சாலை அருகில் நடைபெறவுள்ளது.

  • இதில் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களும், அறிஞர்களும் கலந்து கொண்டு மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்பது பேச உள்ளனர்.

  • இம்மாநாட்டை ஒட்டி ஒரு விழிப்புணர்வு பேரணியும் நடைபெற உள்ளது. இப்பேரணி புதுவை பெரியார் சிலை பிள்ளைத்தோட்டம் அருகில் அன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கும்.