Monday, February 20, 2006

விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கவேண்டும்

இந்தியாவின் புதுவை மாநிலத்தில் அரியாங்குப்பத்தில் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.

புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு. அய்யப்பன் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

இந்த மாநாட்டில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, பொதுச் செயலாளர்களில் ஒருவரான கோவை கு.இராமகிருட்டிணன் மற்றும் பொதுச் செயலாளர்களில் ஒருவரான தமிழீழ விடுதலைப் போராட்ட பரப்புரையாளர் விடுதலை க.இராசேந்திரன், தமிழ் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் தியாகு, மக்கள் உரிமை கூட்டமைப்பை சேர்ந்த புதுவை கோ.சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத்தின் நிர்வாகி இரா.அழகிரி மற்றும் மீனவர், விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் திரு இரா.மங்கையர் செல்வம், செந்தமிழர் இயக்கத்தலைவர் ந.மு. தமிழ்மணி, மற்றும் ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தமிழீழத்தில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு உதவக்கூடிய வகையிலும், தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க தமிழக மக்களுக்குள்ள ஜனநாயக உரிமையை மீட்கும் வண்ணமும் இந்திய அரசு விடுதலைப்புலிகளின் மீதான தடையை விலக்கிக்கொள்ள வேண்டும்.

இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழீழத்தின் அமைதியைக் குலைக்கும் வகையில் தமிழ் மக்கள் மீது போர் தொடுக்கத் திட்டமிட்டு முயற்சிகளைச் செய்து வருகிறார். எனவே இந்திய அரசு சிங்கள அரசுக்கு எந்த வகையிலும் உதவக்கூடாது. உள்ளிட்ட பல தீர்மாணங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அக்கட்சியின் புதுவை மாநில செய்தித் தொடர்பாளர் ம.இளங்கோ நன்றி கூறினார்.